நடிகை குஷ்புவுக்கு அமீரக கோல்டன் விசா

திருவனந்தபுரம்: சினிமா உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதன் காலாவதி 10 வருடங்களாகும். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பார்த்திபன், திரிஷா உள்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகை குஷ்புவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த நிகழ்ச்சியில் அமீரக அரசு சேவை நிறுவனமான இசிஎச் டிஜிட்டல் தலைமை நிர்வாகி இக்பால் மார்க்கோனி கோல்டன் விசாவை குஷ்புவுக்கு வழங்கினார்.

Related Stories: