நவராத்திரிக்கு எதிராக கருத்து வாரணாசி பல்கலை. பேராசிரியர் டிஸ்மிஸ்

வாரணாசி: நவராத்திரி விரதத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட வாரணாசி பல்கலைகழக கவுரவ பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீட பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியவர் மிதிலேஷ் கவுதம். இவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘பெண்கள் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக இந்திய அரசிலயமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது.

இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் பயத்தில் இருந்து விடுபடலாம், அடிமைத்தனத்தையும் முறியடிக்கலாம். ஜெய்பீம்’’ என கூறியிருந்தார். இதைத் தொடர் ந்து பேராசிரியருக்கு எதிராக பாஜ மாணவர் அமைப்பான ஏபிவிபி புகார் அளித்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் மிதிலா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு பேராசிரியர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: