சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

சென்னை: கடல் உப்பு காற்று காரணமாக ராமேஸ்வரம் ரயில் பெட்டிகள் பராமரிப்பு நடைமேடைகள் சேதம் அடைந்துள்ளன. புதிய பராமரிப்பு நடைமேடைகள் அமைக்கும் பணி இன்று முதல் துவங்கி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வந்த ராமேஸ்வரம் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்று (01.10.2022) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் (22662) இன்று இரவு 11.15 மணிக்கு 175 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Related Stories: