×

அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பாஜக பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்

பெரம்பூர்: வடசென்னை மாவட்டத்தை சேர்ந்த பாஜ நிர்வாகிகள், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். வடசென்னை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசு தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் நவீன்குமார், மண்டல தலைவர் விஜய், துணைத் தலைவர்கள் அகஸ்டின், பார்த்திபன் மற்றும் இளைஞரணியை சேர்ந்த லோகேஷ், சரண், சசிகுமார், ஊடக பிரிவையை சேர்ந்த வெங்கடேசன், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சஞ்சய் உள்ளிட்ட 11 ேபர் பாஜகவில் இருந்து விலகி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை அவரது வீட்டில் சந்தித்து அவரது முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அப்போது தாயகம் கவி எம்எல்ஏ, பகுதி, வட்ட நிர்வாகிகள் இருந்தனர். இதன்பிறகு பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர்  நவீன் கூறுகையில், ‘’திராவிட மாடல் ஆட்சியை பார்த்து திமுக.வில் இணைந்தோம், முதலமைச்சர் கடந்த ஒன்றரை வருடத்தில் ஏராளமான சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். பாஜக. வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பொய் கூறுவதற்காகவே ஒரு கட்சி உள்ளது என்றால் அது பாஜகதான்’ என்றார்.

Tags : minister ,PK Shekharbabu ,BJP ,DMK , In the presence of minister PK Shekharbabu, BJP officials joined DMK
× RELATED ஏழை மக்கள் பயனடையும் வகையில் முதல்வர்...