கான்கிரீட் பெயர்ந்து தலைகாட்டும் இரும்பு கம்பிகள்; ஆபத்தை விளைவிக்கும் பாலம்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை 4வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் முதல் தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிறிய பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் வழியாக நேதாஜி நகர், இந்திரா காந்தி நகர், கருணாநிதி நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பாலத்தின் ஏறும் பகுதியில் கான்கிரீட் தரைகள் பெயர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே நீட்டி கொண்டு அபாயநிலையில் உள்ளது.

இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படும் நிலையில் பழுதாகியுள்ளது. இதனால் பாலம் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது. அவற்றை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பாலத்தை சீரமைக்க மண்டல தலைவர் உள்பட மாநகராட்சி உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.

Related Stories: