அரியலூரில் விசாரணைக்கு வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது பாராட்டுக்குரியது: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அரியலூரில் விசாரணைக்கு வந்த 16 வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது பாராட்டுக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியலூர் மாவட்டத்தில், நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி திரு. ராம்ராஜ் அவர்கள் முன் வந்த 16  வழக்குகளில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது பத்திரிக்கை செய்தியாகியுள்ளது. இது பாராட்டுக்குரியது.

சுற்றுலா, இன்சூரன்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் செய்த தவறுக்காக அபராதம் செலுத்த நேர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெற்றுள்ளார்கள். இதுபோன்ற வழக்குகள் மக்களிடையே பிரபலமாக்கப் பட வேண்டும். தரமான சேவை, தொழில் முறைகளை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியமான ஒன்று. அரசு திட்டமிட்ட விதத்தில், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும், நுகர்வோர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடையே பிரபலமாக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: