×

இனி உங்களின் தரவுகளை நிறுவனங்கள் சேமிக்க இயலாது: இன்று முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது ரிசர்வ் வங்கி

டெல்லி: டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், பாயிண்ட் ஆப் சேல் கருவிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த டோக்கனைசேஷன் எனப்படும் புதிய தரவுகள் சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்கெனவே பெரிய வணிகர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். டோக்கனைசேஷன் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உதவும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ரிசர்வ் வங்கியின் கார்ட் ஆன் ஃபைல் முறையிலான டோக்கன்சேஷனை மாற்றப்பட்டுள்ளன. தற்போது இந்த பணி நிறைவடைந்துவிட்டதால் புதிய டோக்கனைசேஷன் விதிமுறைகள் இன்று முதல் அமலாகின்றன.

இந்த புதிய விதிமுறைகளின்படி இனி ஆன்லைன் பரிவர்த்தனையின் போது நமது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் முன்னோடியான விவரங்களை எந்த நிறுவனமும் எடுக்கமுடியாது, சேமிக்கவும் முடியாது. டோக்கனைசேஷன் என்பது நமது கார்டுகளின் உண்மையான விவரங்களை டோக்கன் எனப்படும் மாற்று குறியீட்டுடன் மாற்றியமைப்பதாகும். மொபைல் போன்கள், டேப்ளட்கள், மடிக்கணினிகள், டெக்ஸ்டாப்கள், வாட்ச்கள், கையில் அணியும் பேண்டுகள், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் போன்ற சாதனங்களிலும் டோக்கனைசேஷன் செய்யமுடியும்.    


Tags : RBI , Debit, Credit Card, New Norm, Amal, RBI
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு