தமிழ்நாடு முழுவதும் அக். 11 மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும்: 9 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11 மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என 9 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. தி.க., காங்., மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.ம.க., த.வா.க. கூட்டாக அறிவித்துள்ளது. அக்டோபர் 11ல் நடக்கும் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிக்கு மேலும் 10 கட்சிகள், 13 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன்:

தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 11 மாலை 4 மணிக்கு சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை அனுமதிக்க மாட்டோம். சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்போம்; அனைவரும் வருக என குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன்:

அக்டோபர் 2ம் தேதிக்கு பதில் அக்டோபர் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் அக்டோபர் 2ல் அனுமதி வழங்க இயலாமைக்கான காரணம் குறித்தும் காவல்துறை விளக்கியது. ஆதரவு அளித்த கட்சிகள், இயக்கங்களின் தலைவர்களுடன் கலந்துபேசியதன் அடிப்படையில் அக்டோபர் 11ல் மனித சங்கிலி நடைபெறும் என்று கூறினார்.

Related Stories: