×

ஹரியானா குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து... மாலுக்குள் சிக்கியிருந்த 3 பேர் பத்திரமாக மீட்பு

ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். குருகிராமில் உள்ள குளோபல் ஃபோயர் மாலில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதஹனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீ விபத்தின் போது 3 பேர் மாலுக்குள் சிக்கியிருந்த நிலையில் அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள தீயணைப்புதுறை அதிகாரிகள் வீரர்களின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


Tags : Gurugram, Haryana , Haryana, Gurugram, commercial complex, fire, 3 persons, rescue
× RELATED அரியானா மாநிலம் குருகிராமில் போலி...