×

அரசு பேருந்தில் ஏறி தகராறு!: திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கோவை மூதாட்டி, அதிமுக பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: திமுக ஆட்சி குறித்து அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்டதாக கோவை மூதாட்டி, அதிமுக பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் ஏறி ஓசி டிக்கெட் வேண்டாம் என்று நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என்று நடத்துனரிடம் மூதாட்டி தகராறு செய்த வீடியோ வெளியானது. அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

வேண்டுமென்றே அதிமுகவை சேர்ந்தவர்கள் பாட்டியை தகராறு செய்ய வைத்ததாக திமுக சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அதிமுகவை சேர்ந்த பிருத்விராஜ், மதிவாணன், விஜய்ஆனந்த் ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தகராறு செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் 3 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.


Tags : Gov , Bus, DMK regime, defamation, Coimbatore old lady, case
× RELATED அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் வேலை...