நீட் தேர்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புரிதல் இல்லை: பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ராணிப்பேட்டை: நீட் தேர்வு குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புரிதல் இல்லை என பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது எனவும் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஆன்லைன் விளையாட்டிற்கு தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது எனவும் அதற்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் ஆன்லைன் விளையாட்டால் இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது, அதற்க்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  

Related Stories: