நவராத்திரிக்கு விரதம் இருப்பதற்கு பதிலாக பெண்கள் அரசியல்சாசனம் படிக்க வேண்டும் என்று சொன்ன பேராசிரியர் பணிநீக்கம்

லக்னோ: நவராத்திரிக்கு விரதம் இருப்பதற்கு பதிலாக பெண்கள் அரசியல்சாசனம் படிக்க வேண்டும் என்று சொன்ன பேராசிரியர் மித்லேஷ்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் அரசியல் சாசனத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிக்க வேண்டும் என பேராசிரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பேராசிரியருக்கு எதிராக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. புகார் அளிக்கப்பட்டதையடுத்து பேராசிரியர் மித்லேஷ்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டு பல்கலைக்கழக வளாகத்திலும் நுழைய தடை விதிக்கப்பட்டது.

Related Stories: