×

தீபாவளியை ஒட்டி ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு: அமைச்சர் நாசர் பேட்டி

ஈரோடு: தீபாவளியை ஒட்டி ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி வரை ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்த பின் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அப்போது, பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஆவின் தீபாவளி விற்பனை ரூ.53 கோடியாக இருந்தது என்றார். பால்வளத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும். ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

கோவை, மதுரை, வேலூரில் விதிமீறிய 10க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. ஆவின் பொருட்களின் குறைகள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவதும் பட்டாசும், இனிப்பும் தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,  தீபாவளியை ஒட்டி ரூ.250 வரை ஆவின் பொருட்களை விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

Tags : Diwali ,Minister ,Nasser , Diwali, Rs. 250 crores, Aavin products, Minister Nasser
× RELATED காணாமல் போனால் விரைவில் கண்டுபிடிக்க...