வால்பாறை ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் ரேஷன் கடை சூறையாடிய ஒற்றை காட்டுயானை: 4 மூட்டை அரிசி, ஓடு, மொபட் துவம்சம் செய்தது

வால்பாறை:  வால்பாறை ஸ்டேன்மோர் எஸ்டேட் ரேஷன் கடையை ஒற்றைக்காட்டுயானை சூறையாடியது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஓடுகள் நொறுக்கி சேதமானது. 4 மூட்டை அரிசியை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது.  இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து உள்ள ஸ்டேன்மோர். இங்குள்ள எஸ்டேட்டில் நேற்று முன்தினம் அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை  தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ள ரேசன் கடையை அடித்து, உடைத்து துவம்சம் செய்தது. பின்னர் அங்கிருந்த அரிசிரியை தின்றது.

யானை தாக்கியதில் 500க்கும் மேற்பட்ட ஓடுகள் நொறுங்கியது. 4 மூட்டை அரிசி தின்றும் தூக்கி வீசியும் நாசப்படுத்தியது. அதன்பின்னர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்து தப்பினர். அப்போது அழகர்சாமி என்பவரது மொட்டை தூக்கி வீசி எறிந்தது. இதில் மொபட் சேதமானது. இந்நிலையில் காஞ்சமலை எஸ்டேட்டில் புகுந்த மற்றொரு யானைக்கூட்டம் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை முற்றுகையிட்டு, விடிய விடிய போக்கு காட்டின. சில வீடுகளின் கதவு, ஜன்னல்கள் சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை நகராட்சி தலைவர்  அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் ஜேபிஆர் பாஸ்கர், மாவட்ட துறை செயலாளர்  ஈ.கா. பொன்னுசாமி ஆகியோர் ஆய்வு செய்து, வனத்துறை  உரிய பாதுகாப்பு  நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: