×

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் சந்திப்பு: ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க கோரிக்கை..!!

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்ததாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்.

மதுரையில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை செய்தோம். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கான கடன் திட்டங்கள் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் ஆலோசனை மேற்கொண்டோம். ஆப்டிகல் பைபர் புராஜெக்ட்டுக்கு ரூ.184 கோடியும், ஊரக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.3266 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளதாக கூறினார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் உறுதியாக நடைபெறும் என்றும் அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Finance Minister ,Union Finance Minister ,Nirmala Sitharaman , Nirmala Sitharaman, Finance Minister of Tamil Nadu, GST balance
× RELATED பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை