கலிபோர்னியா: பிரபல டெஸ்லா வாகன தயாரிப்பின் நிறுவன தலைவரான எலான் மஸ்க், தனது நிறுவனம் தயாரிப்பான அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தாலோ ஆல்ட்ரோ என்ற இடத்தில் ஏ.இ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், ஆப்டிமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நவீன ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார். அவர் அறிமுகம் செய்ததும் மேடையில் அமர்ந்திருந்த ஆப்டிமஸ் ரோபோ பார்வையாளர்களை நோக்கி கையசைத்ததை அடுத்து அரங்கத்தில் கரவொலி எழுந்தது.