×

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, மதிவேந்தன், எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா, தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சிவாஜி கணேசன் மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Tilagam Shivaji Ganesan ,Chief Minister ,stalin , Shivaji Ganesan, 95th Birthday, Statue, M.K.Stalin
× RELATED முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில்...