நியூ கல்லூரியில் வருகிற 15ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சென்னை: தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15ம் தேதி ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில்  நடைபெற உள்ளது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்களால் 50,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. மேலும், இம்முகாமில் வருகை புரியும் வேலைநாடுநர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்கு பதிவுகள் செய்து, திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளது.  இந்த முகாமில் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவர குறிப்புடன் நேரில் வருகைப்புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம்.

Related Stories: