லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

தாம்பரம்: ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து கடப்பா கல் ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை பள்ளிக்கரணை நோக்கி வந்த லாரி வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலை வழியாக தாம்பரம் - முடிச்சூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரியில் இருந்த கடப்பா கல் மீது படுத்து தூங்கிக் கொண்டு வந்த சிவாரெட்டி (36), வரதராஜுலு (52) ஆகியோர் மீது விழுந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

மேலும், லாரியின் உள்ளே இருந்த ஓட்டுநர் லட்சுமணய்யா (36), அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு (50) ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: