கள்ளச்சந்தையில் விற்க முயன்ற1 டன் கோதுமை பறிமுதல்

தண்டையார்பேட்டை: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சசிகலா மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சவுகார்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பள்ளி தெருவில் ஒரு வீட்டில் 21 மூட்டைகளில் 1050 கிலோ ரஷேன் கோதுமை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக அரசகுமார்  (40) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அதில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையை வியாசர்பாடி பகுதியில் இருந்து, குறைந்த விலைக்கு வாங்கி சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Related Stories: