சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்து சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் சுருட்டிய வாலிபர் கைது: 45 போலி பாஸ்போர்ட் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்து பல லட்சம் மோசடி செய்த மதுரை வாலிபரை சைபர்  க்ரைம் போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து 45 போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலூர் கிளிஞ்சிக்குப்பம் நல்லப்பரெட்டி பாளையத்தை சேர்ந்த வாசு (49) என்பவர், சென்னை சைபர் க்ரைம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘‘பேஸ்புக் மூலம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தவருவாக விளம்பரம் செய்து தன்னிடம் ரூ1 லட்சத்தை ஆன்லைன் மூலம் வாலிபர் ஒருவர் மோசடி செய்துள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என தெரிவித்து இருந்தார்.

அந்த புகார் மீது விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார், கடலூர் சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி சீனிவாசலுவுக்கு உத்தரவிட்டனர். அதன்படி கடலூர் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு கே.கே.நகரை சேர்ந்த பாண்டியன் (எ) செந்தமிழ்பாண்டியன் (34) என்பவர், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்து போன் செய்யும் நபர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று கொண்டு ஆன்லைன் மூலம் ரூ1 லட்சம் பறித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதுபோல் பாண்டியன் தமிழகம் முழுவதும் பலரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து பல லட்சம் ரூபாய் சுருட்டியது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் மோசடி நபரான பாண்டியனை கைது ெசய்தனர். அவனிடம் இருந்து 45 இந்திய போலி பாஸ்போர்ட் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: