அரையிறுதியில் பென்சிச்

எஸ்டோனியாவில் நடக்கும் தாலின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் குரோஷியா வீராங்கனை டோனா வேகிச் (26 வயது,  85வது ரேங்க்),  சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச் (25வயது, 14வது ரேங்க்) மோதினர். ஒரு மணி 31 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில்  பென்சிச் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா (26 வயது, 27வது ரேங்க்) 6-3, 6-4 என நேர் செட்களில் பிரேசிலின் ஹடாட் மயாவை (26 வயது, 15வது ரேங்க்) வீழ்த்தினார். அரையிறுதியில் பென்சிச் - கிரெஜ்சிகோவா மோதுகின்றனர்.

Related Stories: