மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே

சென்னை: மூக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. கடைசியாக ராதே ஷியாம் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இப்போது இந்தியில் சல்மான் கானுடன் வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தனர். தோற்றம் அழகாக தெரிய இதுபோல் நடிகைகள் அறுவை சிகிச்சை செய்துகொள்வது அவ்வப்போது நடப்பதுதான். அந்த வரிசையில் இப்போது பூஜா ஹெக்டே சேர உள்ளார். அவரது மூக்கை அவரது நட்பு வட்டாரங்கள் விமர்சித்து இருந்தன. மேலும் அறுவை சிகிச்சை செய்துகொள் என அறிவுரையும் வழங்கியிருந்தனர்.

இதையடுத்து மூக்கு ஆபரேஷன் செய்ய பூஜா தயாராகிவிட்டாராம். தற்போது படப்பிடிப்பிலிருந்து பூஜாவுக்கு ஓய்வு கிடைத்திருக்கிறது. இதையடுத்து வெளிநாடுக்கு சென்று அங்கு மூக்க ஆபரேஷன் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இது பற்றி பாலிவுட் மீடியாவினர் பூஜாவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதற்கு முன் ஸ்ருதிஹாசனும் மூக்கு ஆபரேஷன் செய்தார். நடிகை அதுல்யாவும் இதுபோல் சர்ஜரி செய்து தனது மூக்கை மாற்றி அமைத்துக்கொண்டார். அவர்களும் இதுபற்றி வெளிப்படையாக பேச மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: