தமிழில் மீண்டும் நாகார்ஜூனா

ஐதராபாத்: இன்டர்போல் அதிகாரி வேடத்தில் நாகார்ஜூனா நடிக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம், ‘இரட்சன்-தி கோஸ்ட்’. இது அக்டோபர் முதல் வாரம் திரைக்கு வருகிறது. பிஎஸ்வி கருடவேகா’, ‘சந்தமாமா கதலு’ உள்பட பல படங்களை இயக்கிய பிரவீன் சத்தாரு இயக்கியுள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, நார்த் ஸ்டார் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளன. கடந்த 2016ல் வெளியான ‘தோழா’ படத்துக்குப் பிறகு நாகார்ஜூனா ‘இரட்சன்-தி கோஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

அவரது ஜோடியாக சோனல் சவுகான், முக்கிய வேடங்களில் குல்பனாக், அனிகா சுரேந்திரன் நடித்துள்ளனர். முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’, ‘ஸாம்பி ரெட்டி’ போன்ற படங்களின் இசை அமைப்பாளர் மார்க் கே ராபின், பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் ’தி கோஸ்ட்-கில்லிங் மெஷின்’ என்ற பெயரில் வெளியாகிறது.

Related Stories: