ரயில்வே புதிய கால அட்டவணை இன்று அமல்

புதுடெல்லி: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரயில்வே அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இந்திய ரயில்வே உள்ளது. இது தினமும் 3,240 எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், 3 ஆயிரம் சாதாரண பயணிகள் ரயில்கள்,5,660 புறநகர் ரயில்களை இயக்குகிறது. இவற்றில் தினமும் 2.23 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இந்நிலையில், புதிய ரயில்வே கால அட்டவணையை ‘ரயில்கள் ஒரு பார்வை’ (TAG) என்ற பெயரில் ரயில்வே வெளியிட்டுள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. புதிய ரயில்வே அட்டவணையை www.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.

Related Stories: