பல்கலை.கள், உயர் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 % இடங்கள் உருவாக்கலாம்: யுஜிசி அனுமதி

புதுடெல்லி: பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கைக்காக,  தற்போதுள்ள இடங்களை விட  கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கலாம் என பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் அதிகளவில் கல்வி கற்பதை ஊக்குவிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்காக பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது ஒதுக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையை  தவிர, கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்குவது பற்றி பொதுமக்களிடம் கடந்த மாதம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்தின் கேட்பின் அடிப்படையில், இந்த கூடுதல் 25 சதவீத இடங்களை உருவாக்குவதற்கான அனுமதியை இந்த கல்வி நிலையங்களுக்கு யுஜிசி நேற்று அளித்தது.  மேலும், இந்த இடங்களில் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கல்வித் தகுதியை சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசித்து முடிவு செய்யும்படியும், சேர்க்கையை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை  அந்தந்த கல்வி நிலையங்களே உருவாக்கிக் கொள்ளவும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: