தமிழகத்தில் நடப்பது பெரியார், அண்ணா, கலைஞர் அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: துப்பாக்கிகளோடு திரியும் கும்பலான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளிதத பேட்டி: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது சரி, அரசின் காரணங்களும் ஏற்புடையது. தடை விதித்து இருக்கின்ற காரணத்தை ஏற்பதாகவும் அதே நேரத்தில் விசிகவின் சமூக நல்லிணக்க பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 25 கட்சிகள் மனித சங்கிலி பேரணியில் பங்கேற்பதாக கூறியிருந்த நிலையில் இதற்கு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

விடுதலை சிறுத்தைகளும் ஆர்.எஸ்.எஸ் ஒன்று அல்ல. அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து 27 ஆண்டுகள் ஆகிறது,  அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்பது அம்பேத்கரை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்துத்துவத்தை வீழ்த்தாமல் சமத்துவம் மலராது என முழங்கியவர் அம்பேத்கர். அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுவோம் என்று பாஜ சொல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த சொல்லப்படும் மூன்று காரணங்களும் முற்றிலும் பொருந்தாத காரணங்கள். ஆர்.எஸ்.எஸ். மீது குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குள் இந்தியா முழுவதும் உள்ளது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போல ஆர்.எஸ்.எஸ்ம் தடை செய்யப்பட வேண்டும். துப்பாக்கிகளோடு திரியும் கும்பல். ஆர்எஸ்எஸ் போன்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்யாமல், இந்தியா போன்ற நாட்டில் பலதரபட்ட மக்களுக்கு தொண்டாற்றும் பிஎப்ஐ அமைப்பை  தடை செய்ததில் உள்நோக்கம் உள்ளது. பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கொடுத்தது போல கூழை கும்பிடு போட்டு அனுமதி கொடுக்கும் அரசு தமிழ்நாட்டில் இல்லை.  இங்கு நடப்பது பெரியார், அண்ணா கலைஞர் அரசு. பிற மாநிலங்களில் செய்த சேட்டையை தமிழ்நாட்டில் செய்யலாம் என்று பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் பார்த்தால் தமிழ்நாட்டில் அவர்கள் வால் ஒட்ட நறுக்கப்படும்.

Related Stories: