முதியோர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீடும், நாடும், சமூகமும் உயர்வடைய தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுக்கும் முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலே, வருடந்தோறும் அக். 1ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. தான் கற்காத கல்வியையும், அடையாத பதவியையும், சமூகத்தில் அடையாத உயரத்தையும் தன் சந்ததிகள், பெற வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் சுய தேவைகளையும், ஆசைகளையும் துறந்து பாடுப்பட்ட முதியோர்களின் தியாகங்களை போற்றும் விதமாக அவர்களை வணங்குவோம்.

Related Stories: