சோழவந்தான் அருகே திருவேடகம் கோயிலில் குரங்குகள் அட்டகாசம்: பக்தர்கள் அவதி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கோயிலில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க எழவார் குழலி சமேத ஏடகநாதர் எனும் சிவாலயம் உள்ளது. இங்கு பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

படைக்கும் கடவுளான பிரம்மன் இங்கு வழிபட்டு தான் படைப்பு தொழிலை மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.  மேலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், இங்குள்ள வைகையில் நீராடி விட்டு இக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தினமும் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் குரங்குகள் கூட்டமாக திரிகின்றன.

கோயில் கோபுரம், மேற்கூரை, கொடிமரம் மற்றும் வளாகத்தில் கும்மாளமிடும் குரங்குகளால் சிலைகள், கோபுர புதுமைகள் பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும் கூட்டமாக வரும் இக்குரங்குகள் பக்தர்களையும் துன்புறுத்தி வருகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் கோயில் பாதுகாப்பு கருதி, இக்குரங்குகளை பாதுகாப்புடன் பிடித்து  வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: