உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனை: குளிர்பானம், பால் பறிமுதல்

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தியேட்டரில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் குளிர்பானங்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதிகள் அச்சிடப்படவில்லை. மேலும் அங்கிருந்த பால் சுகாதாரமான முறையில் இல்லாமல் இருந்ததுடன் உள்ளே பூச்சி கிடந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை அழித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சுகாதாரமான முறையில் இல்லாத 5 லிட்டர் பால் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப் பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: