மாணவர்கள் கோஷ்டிக்குள் மோதல்; பல்கலை மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: டெல்லி மருத்துவமனை வளாகத்தில் பதற்றம்

புதுடெல்லி: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ெடல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்தில் இரு மாணவர்கள் குழுகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த சர்தஹான் கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் நோமன் சவுத்ரி (26) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நோமன் சவுத்ரியின் மற்றொரு நண்பரும் மாணவருமான நவுமன் அலி என்பவர், தனது நண்பரைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். இதற்கிடையில், அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்கு வந்தார்.

அவர்களில் ஒருவர், மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த நவுமன் அலியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் நவுமன் அலிக்கு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் நவுமன் அலியை மீட்டு ெடல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நவுமன் அலிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக ெடல்லி  ஜாமியா நகர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: