காந்தி ஜெயந்தி முன்னிட்டு மது கடைகளை மூட உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்  ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:  வரும் 2ம்தேதி  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் முழுவதுமாக மூடப்படவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

எனவே, அன்றைய தினத்திலும், நபிகள் நாயகம்  பிறந்தநாளான  வரும் 9ம்தேதியும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள்  மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்)  மற்றும்  ஆகியவற்றை முழுவதுமாக மூடப்படவேண்டும்.

Related Stories: