தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு 'மகாத்மாவைக் கொண்டாடுவோம்'என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

சென்னை: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியகங்கள் துறை, காந்தி உலக மையத்துடன் இணைந்து மகாத்மாவைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  காந்தியடிகள் கைப்பட  எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது  நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்புக் கண்காட்சி அருங்காட்சியக சிறப்பு கண்காட்சிக் கூடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினையொட்டி 75 சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய விளக்கும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் இருந்து, 153 பள்ளி மாணவர்கள் மகாத்மா காந்தியடிகள் போல வேடமணிந்து, அவரது பொன்மொழிப் பதாகைகளை ஏந்தி பங்கேற்கின்றனர்.  தேச பக்தி பாடல்களைப் பாடியும், நடன நிகழ்ச்சி மூலமும் காந்தியடிகளின் சிறப்பினை போற்றுகின்றனர்.  இந்நிகழ்ச்சியில் அரசு உயர்அலுவலர்கள், பல்துறை முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

Related Stories: