கொதித்த பால் உடலில் கொட்டி குழந்தை பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்சிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் தாமஸ். அவரது மனைவி தியா மேத்யூ. இவர்களது மகள் செரா மரியா பிரின்ஸ்(2). சம்பவத்தன்று தியா மேத்யூ வீட்டில் டீ தயாரிப்பதற்காக பாலை அடுப்பில் சுட வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பால் சூடான பிறகு பாத்திரத்தை அவர் கையில் எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செரா மரியா மீது கொதிக்கும் பால் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தையை எருமேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை செரா மரியா பரிதாபமாக இறந்தது.

Related Stories: