மன்னர் 3-ம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள் டிசம்பரில் வெளியீடு..

லண்டன்: மன்னர் 3-ம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட்டுள்ளனர். டிசம்பரில் இருந்து புதிய மன்னன் மூன்றாம் சார்லஸின் நாணயங்களை மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களை மன்னர் சார்லஸால் தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டதாக ராயல் மின்ட் தெரிவித்துள்ளது. ராணியின் மரணத்திற்குப் பிறகு பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் கொண்ட முதல் நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது.

அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பைக் குறிக்கும் வகையில் புதிய £5 நாணயம் மற்றும் 50p நாணயத்தில் ராணியின் உருவப்படம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் மரணத்தைத் தொடர்ந்து, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இருவரது நாணயங்களும் பிரித்தானியாவில் ஒன்றாகப் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா முழுவதும் 27 பில்லியன் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவை ராணியின் உருவப்படத்தைத் தாங்கியிருக்கின்றது. அவை சேதமடைந்த அல்லது தேய்ந்து, தேவையைப் பூர்த்தி செய்யும் வரை அவை சட்டப்பூர்வமான டெண்டர் மற்றும் புழக்கத்தில் இருக்கும். மேலும் வரும் மாதங்களில் புதிய மன்னரின் உருவம் இடம்பெற்ற நாணயங்கள் புழக்கத்திற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸால் உருவாக்கப்பட்ட சார்லஸின் உருவச்சிலையை அவரே தனிப்பட்ட முறையில் அங்கீகரித்தார். ராணியின் உருவப்படம் நாணயத்தின் வலது பக்கம் பார்ப்பதுபோல் இருந்த நிலையில் பாரம்பரியத்திற்கு ஏற்ப மன்னரின் உருவப்படம் எதிர் திசையில் இடது பக்கம் உள்ளது.

புதிய மன்னன் 3-ம் சார்லஸின் உருவச் சிலையைச் சுற்றி லத்தீன் கல்வெட்டு முறைப்படி CHARLES III • D • G • REX • ​​F • D • 5 POUNDS • 2022” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது கிங் சார்லஸ் III, கடவுளின் அருளால், நம்பிக்கையின் பாதுகாவலர் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ராணியின் இரண்டு உருவப்படங்களை பின்புறம் கொண்டிருக்கும் நினைவுச் சின்னமான புதிய £5 நாணயம், புழக்கத்தில் வராது அல்லது சட்டப்பூர்வமானதாக இருக்காது. 50 பென்ஸ் நாணயத்திலும் பின்புறம் ராணியின் முடிசூட்டு விழாவை நினைவுகூரும் வகையில் 1953 ஆம் ஆண்டு முடிசூட்டு மகுடத்தில் முதலில் தோன்றிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: