பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்துக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை நாளை மறுநாள் தொடங்கிவைக்க இருந்தது. அங்கு உணவு பொருட்கள் உட்பட மளிகை பொருட்கள் 17 ஆயிரம் நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் மக்களை கவரும் வகையில் கோதுமை பாக்கெட்டை வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்ய பஞ்சாப் அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இதில் பங்கேற்ற சில நிறுவனங்கள் கோதுமை மாவு அரைத்து வீடுகளுக்கு நேரடியாக கொடுக்க செலவாகும் தொகையை டெண்டரில் கூறியிருந்தது. இந்நிலையில் நியாய விலை கடை ஊழியர்கள் கூட்டமைப்பு சண்டிகர் உயர்நீதிமன்றத்தை நாடியது. தங்கள் துறையினரின் உரிமையை பாதிக்கும் அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தில் மூன்றாவது நபரின் தலையீடு இருக்க கூடாது என்று கூறி இடைக்கால தடை விதித்தது. விசாரணை முடியும் வரை பழைய நிலையே தொடர் வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: