சென்னை உயர்நிதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: கொலீஜியம் என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே ஆகும். ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய் சந்திராசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கௌல் ஆகியோர் அடங்கிய கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க புதன்கிழமை கூடியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலிஜியம் தீர்மானித்தது. மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முடிந்து அதன் பிறகு எஸ்.முரளிதர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தவர் ஆவார். அரசியலமைப்பு சட்டம், அரசு நிர்வாக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர் நீதிபதி முரளிதர் ஆவார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட நீதிபதி முரளிதர், மே 2006-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். பின்னர் மார்ச் 6, 2020 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

ஜனவரி 4, 2021 அன்று ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா, மும்பை மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களுக்கு 20 நீதிபதிகளை நியமிக்க செப்டம்பர் 12-ஆம் தேதி தலைமை நீதிபதி லலித் தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: