பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசை பட்டியல் அக். 5-ம் தேதி வெளியீடு: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 5-ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பி.ஆர்க்.படிப்புக்கான கலந்தாய்வு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கும் எனவும், பொறியியல் படிப்புக்கான 3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கும் என அவர் தெரிவித்தார். பொறியியல் படிப்புக்கான 2 கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கலந்தாய்வில் தகுதியுள்ள மாணவர்கள் 31,094 பேர் அறிவிக்கப்பட்டார்கள். அதில் விருப்ப பாடம் 23,458 பேர் பதிவு செய்த நிலையில் 14,153 பேர் கல்லூரியில் சேர உள்ளார்கள்.

அதேபோல், பொறியியல் சேவை மையங்களில் 5,016 பேர் சேரவேண்டியவர்கள் மேலும், மேல்நோக்கிய நகர்வுக்காக காத்திருப்போர் 4,016பேர், மொத்தம் 14,153 பேர் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியில் சேர தயாராகயுள்ளனர். இந்நிலையில், அக்டோபர் இறுதியில் முதலாம் ஆண்டு பி.இ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார். கல்லூரியை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அக்டோபர் 10-ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், இவ்வாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடம் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், விருப்பமான கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இறுதிவரை வாய்ப்பு வழங்கப்படுகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related Stories: