ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மைசூருவில் இருந்து தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று நண்பகல் 12.05 க்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 5 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது. தூத்துக்குடியில் இருந்து நாளை மதியம் 3 மணிக்கு மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மைசூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில்:

மைசூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக இன்று சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு 12.45க்கு மைசூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை மதியம் 3.30க்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.

மைசூருவில் இருந்து தமிழக தென் மாவட்டங்களுக்கு ரயில்:

* மைசூரு, யஷ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்குகிறது.

* யஷ்வந்த்பூர் - நெல்லை சிறப்பு ரயில் அக்.4 மற்றும் 11ம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும்.

* சிறப்பு ரயில் நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை வந்தடையும் மறுநாள் காலை 4.30க்கு நெல்லையை அடையும்.

* மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் அக்.5 மற்றும் 12ம் தேதி நெல்லையில் இருந்து காலை 10.40க்கு புறப்படும்.

* பிற்பகல் 1.10 மணிக்கு மதுரை வரும் சிறப்பு ரயில் நள்ளிரவு 11.30 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.

* தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் புறப்பட்டு 5.50 மணிக்கு மதுரை வரும்.

* நாளை மறுநாள் பிற்பகல் 12.25 மணிக்கு சிறப்பு ரயில் மைசூரு சென்றடைகிறது.

* தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் யேலியூர், மாண்டியா, பெங்களூரு, ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல் வழியாக செல்லும்.

* கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ஊர்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.

Related Stories: