வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.5% உயர்த்தி அறிவித்தார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ்..!!

டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும்  0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டார். வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதம் ஆனது. கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக ஆர்.பி.ஐ. கவர்னர் தெரிவித்தார். 2022 மே மாதம் முதல் செப்டம்பர் வரை ரெப்போ விகிதம் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை 4வது முறையாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயர்கிறது:

ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன, தனி நபர் கடனுக்கான தவணைத் தொகை அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும்:

பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஏற்கனவே ஆர்.பி.ஐ. கூறியிருந்த நிலையில் தற்போது 7 சதவீதம் என்று கணித்துள்ளது.

Related Stories: