ஆட்டோ மொபைல் ஊழியர்களிடம் ரூ.29 லட்சம் வழிபறி: போலீசார் விசாரணை

சென்னை: சேத்துப்பட்டு குருசாமி பாலம் அருகே ஆட்டோ மொபைல்ஸ் நிறுவன ஊழியர்களிடம் ரூ.29 லட்சம் வழிப்பறி செய்துள்ளனர். நசீர்கான் என்பவரின் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் சந்தோஷ் மற்றும் கமலக்கண்ணன் பணியாற்றி வருகின்றனர். நசீர்கான் தனது ஊழியர்களிடம் சேத்துப்பட்டில் உள்ள தனது நண்பர் முகமது சேக்கிடம் ரூ.29 லட்சம் கொடுக்க சொல்லியுள்ளார். ஊழியர்கள் இருவரும் ரூ.29 லட்சத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பொது மர்ம கும்பல் வழி மறித்து கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Related Stories: