கனவு நகர் திட்டத்தால் சூரத் பாதுகாப்பான வைர வர்த்தக மையமாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

சூரத், செப்.30: சூரத்தை பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக மாறுவதற்கு, கனவு நகர் திட்டம்  உதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குஜராத்திற்கு 2 நாள் பயணமாக நேற்று சென்றார். சூரத் விமான நிலையத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று பொதுமக்களை அவர் சந்தித்தார். பின்னர், சூரத் நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ29,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிதமாக முன்னேறியுள்ளது. ஏராளமான குடும்பங்கள் வைரம் மற்றும் ஜவுளி தொழிலை நம்பியே இருக்கின்றனர். கனவு நகர் திட்டம் நிறைவடைந்தால் சூரத்தானது பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக மாறும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

Related Stories: