பாப்புலர் பிரன்ட் டிவிட்டர் முடக்கம்

புதுடெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் 8 கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில்,, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ5.2 கோடி நஷ்டஈடு செலுத்த உத்தரவு: பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் கைதை கண்டித்து, கேரளாவில் இந்த அமைப்பினர் சில தினங்களுக்கு முன் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தின்போது 75க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும், அரசு மற்றும் தனியார் சொத்துகளும் சேதப்படுத்தப்்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த சேதங்களுக்கான நஷ்டஈடாக ரூ5.2 கோடியை 2 வாரங்களில் செலுத்தும்படி, இந்த அமைப்புக்கு நேற்று உத்தரவிட்டது. இல்லாவிட்டால், நிர்வாகிகளின் சொத்துகளை கையகப்படுத்தும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

Related Stories: