×

வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் பறவை தலை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘‘இங்கு கிடைத்த பழங்கால பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவில் வெம்பக்கோட்டை பகுதியில், எந்த நூற்றாண்டை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது குறித்த  தகவல்கள் தெரிய வரும்’’ என்றார்.

Tags : Vembakotta , Discovery of terracotta human face bird head in Vembakotta excavations
× RELATED வெம்பக்கோட்டையில் தீ தொண்டு நாள் வார விழா