அறிவியல் வினாத்தாள் ‘அவுட்’ விவகாரம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் அ.மணக்குடி நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்விற்கான வினாத்தாள் அவுட் ஆனது. இதுபற்றி  பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பர், ஆசிரியர்கள் ஜெயக்குமார் (அறிவியல்), குமாரவேல் (கணிதம்) ஆகியோரிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் குமாரவேல், ஜெயக்குமார் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், அறிவியல் பாடத்தேர்வு வினாத்தாளை ஆசிரியர் ஜெயக்குமார் முன் கூட்டியே அவுட் செய்ததை, ஆசிரியர் குமாரவேல் வாட்ஸ்அப் மூலம் பலருக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதையடுத்து தலைமை ஆசிரியர் மீனாம்பர், ஆசிரியர்கள் ஜெயக்குமார், குமாரவேல் ஆகியோரை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: