கொக்கு பார்க் என்பதை கலைஞர் பூங்கா என்று பெயர் மாற்ற வேண்டும்: மாநகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் 113வது வார்டு திமுக கவுன்சிலர் பிரேமா சுரேஷ் பேசுகையில், ‘‘சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா சிலை எதிரே உள்ள பூங்காவை எல்லோரும் ‘கொக்கு பார்க்’ என்று அழைக்கிறார்கள். அதை மாற்றி ‘கலைஞர் பூங்கா’ என்று பெயர் வைத்து அழைக்க அனுமதி அளிக்க வேண்டும். அதேபோன்று பெரியார் சாலையில் பூங்கா உள்ளது. அந்த பூங்காவை பெரியார் சாலை பூங்கா என்று எல்லோரும் அழைக்கிறார்கள்.

அந்த பூங்காவை ‘தந்தை பெரியார் பூங்கா’ என்று பெயர் மாற்ற வேண்டும். பெரியார் சாலையில் அமைந்துள்ள மகாலிங்கபுரம் வடக்கு உஸ்மான் சாலை இறங்கும் 110 மற்றும் 113 இணைக்கும் மேம்பாலத்துக்கு கலைஞர் மேம்பாலம் என்று பெயர் வைக்க வேண்டும் என்றார்.

Related Stories: