குரூப் 2, 2ஏ, குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு முடிவு எப்போது?.. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

சென்னை: குரூப் 2, 2ஏ, குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி முடித்த தேர்வுகளுக்கான முடிவுகளை எப்போது வெளியிடும் என்பதற்கான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் நடந்த குரூப்-2, 2ஏ, குரூப் 4 உள்பட பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதாவது குரூப்-2, 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 208 இடங்களுக்கான முதல்நிலை தேர்வை கடந்த டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடத்தியது.

இந்த தேர்வுக்கு எழுத 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேர் தேர்வை எழுதினர். இதற்கான தேர்வு முடிவு ஏற்கனவே வெளியிட்டு இருந்த அறிவிப்பின்படி, ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புதிய அறிவிப்பில், அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 4 பதவியில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர் உள்பட பணிகளில் 7 ஆயிரத்து 301 இடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடந்தது. இந்த தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதி இருக்கின்றனர்.

இவர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது டிசம்பர் மாதத்தில் தான் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதுபோல் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய மேலும் 9 தேர்வுகளுக்கான தேர்வு முடிவு குறித்த தகவல்களும் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதி இருக்கின்றனர்.

Related Stories: