அடையாறு கால்வாய் கரை பூங்காவுக்கு கலைஞர் பெயர்: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் உள்ள புதிய பூங்காவுக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி பூங்கா’ என்று பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அடையாறு காந்திநகர் கால்வாய் கரை சாலையில் சிஆர்ஆர்டி திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியே 41 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவிற்கு பெயர் வைப்பது தொடர்பாக 13வது மண்டல குழு தலைவர் அளித்துள்ள கடிதத்தில், ‘‘தமிழக மக்களின் சமூக நீதியை வென்றெடுத்து மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் சமத்துவமாக வாழ்வதற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கலைஞரின் நினைவை போற்றும் வகையில், அடையாறு-காந்திநகர் கால்வாய் கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பூங்காவுக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி பூங்கா’ என்று பெயர் சூட்ட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: