கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல்: புழல் விசாரணை சிறையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை சிறை காவலர்கள் உள்ளே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு கைதி கழிவறையில் இருந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தாம்பரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (27) என்பதும், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்  என தெரியவந்தது. இதுகுறித்து, சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: