சென்னையின் 6 மாவட்டங்களின் திமுக செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னையின் 6 மாவட்ட திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை தெற்கு மாவட்டம்: சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக மா.சுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-எஸ்.குணசேகரன், துணைச் செயலாளர்- பாலவாக்கம் த.விசுவநாதன், பாலவாக்கம் மு.மனோகரன், பா.வாசுகி, பொருளாளர்-எஸ்.பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்- க.தனசேகரன், மு.மகேஷ்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், பாலவாக்கம் க.சோமு, ஆலப்பாக்கம் கு.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்- சைதை சம்பத், மா.அன்பரசன், எம்.ஸ்ரீதரன், ப.ரவி, எம்.கே.ஏழுமலை, உ.துரைராஜ், எஸ்.டி.தங்கராஜன், ரா.பாலசுந்தரம், பி.எஸ்.முருகன், வீர.கனிமொழி.

பகுதி செயலாளர் சைதாப்பேட்டை கிழக்கு-ரா.துரைராஜ், சைதாப்பேட்டை மேற்கு-எம்.கிருஷ்ணமூர்த்தி, கலைஞர் நகர் வடக்கு-மு.ரவிசங்கர் (எ) ராஜா, கலைஞர் நகர் தெற்கு-கே.கண்ணன், வேளச்சேரி கிழக்கு - துரை.கபிலன், வேளச்சேரி மேற்கு-சு.சேகர், சோழிங்கநல்லூர் கிழக்கு-வி.இ.மதியழகன், சோழிங்கநல்லூர் மத்திய-ச.அரவிந்த ரமேஷ், சோழிங்கநல்லூர் மேற்கு-எஸ்.வி.ரவிச்சந்திரன், மதுரவாயல் வடக்கு-நொளம்பூர் வே.ராஜன், மதுரவாயல் தெற்கு-காரம்பாக்கம் க.கணபதி, ஒன்றிய செயலாளர் வில்லிவாக்கம் தெற்கு - அ.ம.துரை வீரமணி, தாமஸ்மலை தெற்கு-ஜி.வெங்கடேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தென்மேற்கு மாவட்டம்: சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த.வேலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-ஆ.சந்திரசேகர், துணைச் செயலாளர்-ர.வேதகிரி (எ) நந்தனம் வேதா, மு.சத்யா, கே.மலர், பொருளாளர்- என்.அன்பழகன், செயற்குழு உறுப்பினர்-கோ.சு.மணி, வா.ஷீபா. பொதுக்குழு உறுப்பினர்- எம்.ஆறுமுகம், ஜெ.ஜானகிராமன், யோகேஷ் ரவி, மந்தைவெளி அ.பாபு, வடிவேலு (எ) வேலு சம்பந்தம், ஜி.டி. அம்பேத்கர், அ.வாசுதேவன், செல்வி சவுந்தரராஜன். பகுதி செயலாளர்-தி.நகர் கிழக்கு - ஜெ.கருணாநிதி, தி.நகர் மேற்கு-கே.ஏழுமலை, மயிலாப்பூர் கிழக்கு-எஸ்.முரளி, மயிலாப்பூர் மேற்கு-கி.மதிவாணன் (எ) நந்தனம் கி.மதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மேற்கு மாவட்டம்: சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக நே.சிற்றரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-து.விக்டர், துணைச் செயலாளர்-ஆர்.என். துரை, வி.எஸ். கலைசெல்வன், ஏ.சங்கீதா, பொருளாளர்-ஜெ.எஸ்.அகஸ்டின்பாபு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்- தயாநிதி மாறன், எம்.கே.மோகன், மு.ராஜகாந்தம், நுங்கை வி.எஸ்.ராஜ், வி.என்.ராஜன், எஸ்.சேரன், பொதுக்குழு உறுப்பினர்-எம்.டி.ஆர்.நாதன், ஜெ.நற்குணநாதன், ஏ.டி.முருகன், கராத்தே என்.ஆனந்த், எஸ்.சுரேஷ்குமார், கணேஷ்பிரபு (எ) ராஜேஷ், ரவி. ராஜ்குமார், ஜோஸ் டேனியல், பா.ராபர்ட், கமலா செழியன், வெற்றிச்செல்வி மாணிக்கம், பகுதி செயலாளர் அண்ணாநகர் வடக்கு-ச.பரமசிவம், அண்ணாநகர் தெற்கு-ந.ராமலிங்கம், சேப்பாக்கம்-எஸ். மதன்மோகன், திருவல்லிக்கேணி- எ.ஆர்.பி.எம். காமராஜ் (எ) தனசேகரன், ஆயிரம்விளக்கு கிழக்கு-மா.பா. அன்புதுரை, ஆயிரம்விளக்கு மேற்கு-வே.வினோத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு மாவட்டம்: சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக பி.கே.சேகர்பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-கோ.ஏகப்பன், துணைச் செயலாளர்-தேவ ஜவஹர், ஜி.மகாதேவன், புனிதவதி எத்திராசன், பொருளாளர்-இசட்.ஆசாத். தலைமைச் செயற்குழு உறுப்பினர்- ப.ரங்கநாதன், ஆர்.பிரியா, பி.கே.மூர்த்தி, கே.சந்துரு, கேஎஸ்எம்.நாதன், எம்.விஜயகுமார். பொதுக்குழு உறுப்பினர்- எஸ்.பன்னீர்செல்வம், புரசை கோ.மணி, டி.வி.செம்மொழி (எ) சதீஷ்குமார், ஜெ.துளசிங்கம், பி.உதயசங்கர், வி.ரமேஷ் (எ) நீலகண்டன், சாவித்திரி வீரராகவன், சரிதா மகேஷ்குமார், எம்.இப்ராஹிம் கனி, அ.நிர்மலாதேவி, டாக்டர் ஏ.பி. பூர்ணிமா, இரா.கலைச்செல்வி. பகுதி செயலாளர் துறைமுகம் கிழக்கு-எஸ்.ராஜசேகர், துறைமுகம் மேற்கு -எஸ்.முரளி, எழும்பூர் வடக்கு-சொ.வேலு, எழும்பூர் தெற்கு-வி.சுதாகர், கொளத்தூர் கிழக்கு-ஜசிஎப். வ.முரளிதரன், கொளத்தூர் மேற்கு-எ.நாகராஜன், திரு.வி.க.நகர் வடக்கு-செ.தமிழ்வேந்தன், திரு.வி.க.நகர் தெற்கு- எம்.சாமிகண்ணு, வில்லிவாக்கம் கிழக்கு-வே.வாசு, வில்லிவாக்கம் மேற்கு-கூ.பி.ஜெயின், அம்பத்தூர் வடக்கு-ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் தெற்கு-டி.எஸ்.பி. ராஜகோபால், அம்பத்தூர் கிழக்கு-எம்.டி.ஆர். நாகராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடகிழக்கு மாவட்டம்: சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளராக மாதவரம் எஸ்.சுதர்சனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-குறிஞ்சி எஸ்.கணேசன், துணைச் செயலாளர்-மு.ராஜேந்திரன், டி.ராமகிருஷ்ணன், பி.அறிவழகி. பொருளாளர்-எம்.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்-பா.மதிவாணன், வி.ராமநாதன். பொதுக்குழு உறுப்பினர்- என்.பரந்தாமன், ஜெ.ஜெய்மதன், டி.எ.ராஜி, இரா.முருகேசன், பி.சாந்தி. பகுதி செயலாளர் திருவொற்றியூர் கிழக்கு-தி.மு.தனியரசு, திருவொற்றியூர் மேற்கு-ம.அருள்தாசன், திருவொற்றியூர் மத்திய-எ.வி.ஆறுமுகம், மாதவரம் வடக்கு-புழல் எம்.நாராயணன், மாதவரம் தெற்கு-ஜி.துக்காராம். ஒன்றிய செயலாளர்கள் வில்லிவாக்கம் வடக்கு-ஜி.தயாளன், சோழவரம் தெற்கு-வே.கருணாகரன், புழல்-பெ.சரவணன். பேரூர் செயலாளர்கள் செங்குன்றம்-ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடக்கு மாவட்டம்: சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தா.இளங்கோ (எ) தா.இளையஅருணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவைத் தலைவர்-ஆர்.வெற்றிவீரன், துணைச் செயலாளர்- எஸ்.ஆர்.கமலக்கண்ணன், மு.கோபி, நாகம்மை கருப்பையா. பொருளாளர்-வி.தயாளன். தலைமைச் செயற்குழு உறுப்பினர்- ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, இரா.கருணாநிதி, ந.மனோகரன். பொதுக்குழு உறுப்பினர்-வே.சிவக்குமார், ஏ.தமிழ்ச்செல்வன், கி.ராஜேந்திரன், நா.சண்முகம், ப.மதிவாணன், எல்.அருளரசன், டி.கமலக்கண்ணன், க.அமுல். பகுதி செயலாளர் ஆர்.கே.நகர் கிழக்கு-ரா.லட்சுமணன், ஆர்.கே. நகர் மேற்கு-எஸ்.ஜெயதாஸ் பாண்டியன், ராயபுரம் கிழக்கு-இரா.செந்தில்குமார், ராயபுரம் மேற்கு- வ.பெ.சுரேஷ் ஜெயக்குமார், பெரம்பூர் வடக்கு-அ.முருகன், பெரம்பூர் தெற்கு-க.ஜெயராமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: